உயிரே ஒர் பார்வை பார்
இது உன்
இதயம் எழுதும் கடிதம்
காற்றில் வந்த வார்த்தை எல்லாம் சேர்த்து சேர்த்து
வைக்கிறேன்
எந்தன் வார்த்தை
மௌனவடிவில் இருக்க காண்கிறேன்
மௌனம்தான் முதல் வார்த்தையோ காதலில்
மௌனங்கள் பேசுமிடத்தில்
இசைக்குக்கூட இடமில்லை
இசையைவிட இனிப்பது
மௌனம்தான்
பேசிப்பேசிப் பார்த்த போது மௌனம் எழவில்லை
பேச நீயும் தூரத்தில் இருந்தபோது
மௌனம் எழுந்தது
உன் வார்த்தைகளை சேர்த்தபோது கவியாகவில்லை
உன் மௌனங்களை உச்சரித்த போது கவியாகக் கண்டேன்
மலர்கள் பூக்கும் ஒசை நமக்கு கேட்பதில்லை அது போல மௌனத்திற்கும் ஓசை உண்டு நமக்கு கேட்பதில்லை
என் போல நீயும் புரிந்து கொண்டால் என் மௌனங்கள்
உனக்கும் பிடிக்கும்
மௌனம் இல்லாத காதலோ
எங்கும் வந்ததில்லை
மௌனம் இல்லாமல் காதலும்
முழுதாகிப்போவதில்லை
மௌனங்கள் எப்போது தோன்றுமென்று இது வரை யாரும் கண்டதில்லை
கண்டு கொண்டால்
சொல்லு.......
உன் மௌனத்தில்
ReplyDeleteஎன் காயம் உறங்க
இடம் கொடு