உன்னாலே பெண்ணே தூங்கவில்லை
உன் தொல்லை கூட தாங்கவில்லை
இந்த இன்பம்
எதிலுமில்லை
என்றாலும் இன்னும்
போதவில்லை
என்றெந்தன் நெஞ்சம் அலைபாய்வதேனடி
உன் நினைவாலே
என் இரவுகள் நீண்ட
கவிதை ஆகிறது
உன் கனவாலே
என் தூக்கம்
நனவாகிறது
மழை தூறூம் போதெல்லாம்
உனைக்காண்கிறேன்
எந்தன் நெஞ்ஞத்தை
தீ எரிக்குதே
வார்த்தையில் இல்லாத
ஓர் உணர்ச்சிதான் எந்தன்
உயிரோடு உருவாகுதே
காதல் வந்தாலே எப்போதும்
ஓர் துணை இருக்ககாண்போமோ
கொஞ்சம் சிரித்தால் போதும்
இந்தப் பிறவியே
உனக்காத்தான்
ஒத்தை பார்வை போதும்
இறங்கா போதை ஏறிக்கொள்ளும் என்
உடலோடுதான்
உன் உதட்டோர புன்னகை
போதுமடி எந்தன்
இதயத்தை புயல் தாக்கவே
என் நினைவை எண்ணிக் கொண்டு விழி மூடடி நம்
கனவுகள் சேரட்டுமே
என்னை புதிர் போல
நான் பார்கிறேன்
விடை தேடி உன்னோடு
நான் அலைகிறேன்
விடை இல்லாமேலே
ஒரு வினாவாகிறேன்
என் வினாவை நீ திருத்தி எழுதும் வரை...
Comments
Post a Comment