என் தாயே நீயே எனக்காக பிறந்தாய்
உன் போல யாருமில்லை உறவுகள் மண்ணிலே
நான் வாழும் வாழ்க்கை யாவும் நீ தந்தது
இவ்வுலகம் உன் மடியிலிருந்தே நான் கண்டது
அம்மா என்ற சொல்லே
நான் முதலில் கற்றது
அது போல இனிமை
இல்லை எவ் வார்த்தையிலும்
ஊர் பேர் சொல்லும் பிள்ளையாக நான் ஆக ஆசை கொண்டாய்
நான் கூட எனக்காக அப்படி ஆசை கொண்டதில்லை
உன்னாலே எல்லா உறவும் நான் கண்டு கொண்டேனே
எனக்காக உந்தன் கருவில் நீ பாரம் கொண்டாயே
உன்னை தாங்கும் கருவாக நான் ஆகக்கூடாதா
நான் நோய் கொண்டு படுத்தால் அம்மா
நீ நோய் கொள்ள கண்டேனே
Comments
Post a Comment