Skip to main content

சுமைகளை ஏற்றி விடுவார்கள்

உலகில் இமயம்தான் உயரம் நீ அண்ணார்ந்து உன் இதயத்தை பார்க்கும் வரையில் குறுக்கான வழியில் குனிந்து நடக்காதே உன்னில் சுமைகளை ஏற்றி விடுவார்கள் நேர் வழியில் நிமிர்ந்து நட உன்னையும் அண்ணார்ந்து பார்ப்பார்கள் கடல் புயலில் வழிமாறிய கப்பல் கலங்கரை விளக்கம் பார்த்து கரைதட்டுவது போல் துன்பத்திலும் முயற்சித்தால் உன் இலக்கு உன் கையில் பந்தாகும் எறிந்து விளையாடு தவறவிட்டு விடாதே இருள் சூழ்ந்தால் உன் நிழலும் உன்னை பின்தொடர மறுத்து விடும் அது போல நீ வளைந்தால் உன் கையில் உள்ள இலட்சியப் பந்து உன் கையை விட்டு உருண்டடோடிவிடும் கவலையில்லை திருத்திக்கொண்டு தேடிப்பார் நிச்சயம் கிடைக்கும் சரித்திரத்தில் வருவது போல் உன் வாழ்க்கை போர்க்களம்தான் வெற்றியுண்டு தோல்வியுண்டு இருப்பினும் கடைசியில் தர்மம் வென்று விடும் உன் மேலே உனக்குள்ள நம்பிக்கைதான் உன் வெற்றியின் முதல் படி நம்பிக்கை இழந்து விட்டால் புயல் காற்றில் பொரியை போல ஆகிடுவாய் சிறிய புல் போல புயலில் வளைந்து கொடுத்து மீண்டும் நிமிர்ந்து பார் திரைப்படம் போல் நமது வாழ்க்கை நிமிடம் முடிந்துவிட்டால் முடிந்துவிடும் ஆனாலும் சில நம்முடைய மனதை விட்டு அகலாமல் எம்முள் வாழும் அது போல நாமும் இறந்தாலும் சூழ்ந்து உள்ளவர்களின் நெஞ்சில் வாழ்வது போல் வாழ வேண்டும்.

Comments