Skip to main content

கண்ணீர் மட்டுமே காதலின் பரிசு

வார்த்தை வாள் கொண்டு வீசி என் வயதை கொன்று விட்டாய் என் உயிரை ஊசி கொண்டு குத்தி என் இரத்த ஒட்டத்தை ரசித்தாய் கண்ணீர் மட்டுமே உன்னை காதல் செய்ததன் பரிசு உந்தன் கண்கள் மாயம் எந்தன் உயிரோ காயம் விழுந்தே போகிறேன் மண்ணின் மேலே எந்த பெண்ணும் உன்னைப்போல என்று தோணவில்லை காதல் வெறும் மோகம் என்றென்னியருந்தேன் மேகம் போல் மாறிடக் கண்டேன் மேகத்தில் ஒழிந்திட எண்ண இடியாய் மாறி விட்டது கவிதையாய் இருந்த என்னை இசை கொண்டு புது வடிவில் ரசிக்க செய்தவள் நீதான் என்னை நீ வரைந்த காகிதம் மழையில் கரைந்திட கண்டேன் என் பெண்ணே என் பேச்சில் இருந்த மௌனம் உனக்கு புரியலையா கண்ணில் சொன்ன காதல் உன் விழியில் தெரியலையா கனவில் தொல்லை வேண்டாம் காதல் ஒன்றும் வேண்டாம் எல்லாம் உன்னால் புரிந்தேன் என் காதல் சொல்லத் தோண்றிய நொடியில் உன் காதல் வேறோர் மனதில் அதைக் கண்டு என்னுள் புதைத்துக் கொண்டேன் உன் மீது கொண்ட காதலை உலகத்தில் இதயம் துடித்துக் கொண்டிருக்குரும் வரை என் காதல் அழியாது

Comments