உன்னை என் விழிகள்
கண்டவுடன்
தெரிவது வானவில் என நினைத்தேன்
என் விழி கண்டதென்ன
மாயமா என் மனம் சொல்வதென்ன பொய்யா
விடை தேடி பறவையாகி வானில் திரிந்தேன்
உந்தன் கண்ணில் உள்ள
கரு நிறமா
உந்தன் இதழ் கொண்ட
செந்நிறமா
எது என்னை வானவில் என நினைக்க வைத்ததோ தெரியவில்லை
விடை தேடி மழையாகி
மண்ணில் நுழைந்தேன்
உந்தன் அசைவில்
சொன்ன சொற்கள் என்ன
உந்தன் மௌன ஒசைகள் என்ன வார்த்தை தேடி
அகராதி ஆகிறேன்
Comments
Post a Comment