கண் மூடீ கனாக்கண்டிருந்தேன்
கிளிகளின் கீச்சல் காதில்
அமுத கானமாய் ஒலிக்க
கனவு காண்பதைவிட்டு
காலையை ரசிக்க
கனவு கொண்டவனாய் விழித்து
சாரளத்தை திறந்தேன்
புல்லில் பூத்த பனித்துளிகள்
என்னை புதியவனாய் ஆக்கியது
இன்னும் சில கணங்களில
சுட்டெரிக்கும் சூரியன் வந்து
பனித்துளியை அழைத்துக்கொள்ள
போகிறது
நாளையும் தன் முயற்சியை
கைவிடாது புல்லில் பூக்கும் பனித்துளி
புல்லில் பூக்கும் பனித்துளியாய்
புத்துணர்வு பெறுவோம்......
..................ஹபீஸ் அஹமட்......
Comments
Post a Comment