Skip to main content

Posts

Showing posts from 2015

விழி ரகசியம்

உன் விழிகளில் கொழுந்து விட்டெரியும் தீயை எவ்வாறு என் மனத்தில் கொழுத்துகிறாயோ . இன்னும் எனக்கந்த இரகசியம் புரியவில்லையடி

சருகுகளாய் நான்

அன்று உன் முத்தங்களில் முக்தி பெற்று போயிருந்த நான் இன்று உன் மௌனங்களில் சக்தி அற்று போயிருக்கிறேன் சில வேளை நதியாய் வந்து என்னில் தவழ்ந்து செல்வாய் சில வேளை வெயிலாய் வந்து என்னில் வறட்சியைத் தருவாய் கால நதியில் சில நினைவுகள் என்னைக் கடந்து கடலுடன் இணைந்து விட்டது போலும் தோயவில்லை என் முயற்சி கண்ணீரை நதியாக்கி என்னில் உன் நினைவுகளை கலக்க விடுகிறேன் வசந்தகால இலைகளாய் இளந்துளிர் விட்டு பசுமையாய் இருந்தேன் உன் சுட்டெரிக்கும் பார்வையால் என்னவோ இப்பொழுதுகளில் இலையதிர்கால காயந்த சருகுகளாய் மண்ணிலே

உன் நினைவுகளை திருடாதே

எங்கே போவேன் எதைக்கொண்டு போவேன் இறந்தா போவேன் உன் நினைவுகள் இருக்கும் வரை என் மனதுக்கு இறப்பில்லை உனக்காக இதயம் கூட பரிசளிப்பேன் ஆனால் தயவு செய்து உன் நினைவுகளை மட்டும் என்னிடம் கேட்டுவிடாது உனக்காக நான் செய்ய மறுக்கும் ஒரே காரியம் உன் நினைவுகளை மறப்பதுதான் மன்னித்துவிடு அதை மட்டும் கேட்காதே என்னிடம்

பாலைவனத்தில் என் பாதச்சுவடுகள்

பாலைவனத்தில் தூரத்தே பார்த்த பச்சை மரத்தை நோக்கி சென்று வந்த வழி மாறித்திரிறேன் என்னவள் உன் நினைவுகளால் கால்த்தடங்கள் தேடினேன் காற்றில் மணல் மூடியதால் என்னவோ க...

கனாக்களில் கண்ணீர்

இராத்திரி பொழுதுகளில் இறுக்கமாக என் கழுத்தை சுற்றுகிறது இதயம் இரங்கி கண்ணீர் வடிக்கிறது இன்றைக்கும் என்றைக்கும் இதை நிலைதான் என்னவள் 'ச்சீ' என்ற சொல்தான் காரணம...

குரவளை அறுக்காதே

அறையில் ஒரு குரல் மெதுவாய் அழுது கொண்டிருக்கிறது அத தொலைந்து போன நினைவுகளை தேடி அது சுவாசிக்க காற்றைத்தேடி அது தன் மடியில் தவழ்ந்த மழலையை தேடி தன் கருவில் வளர்ந்த கண்மனி மகவை தேடி படித்து பேர் பெற சென்றமகன் வெடித்து சிதறிவிட்டான் செய்தி கேட்ட தாயுள்ளம் கரு மேகங்களால் சூழ்ந்து விட்டது தன்னிலை மறந்து விட்டது அவள் உயிரில் அவன் பேசிய மழலை வார்த்தைகள் மட்டும் கேட்கிறது அம் மழலை அவ் கல் நெஞ்சக்காரர்களுக்கு என்ன செய்தது மழலைகளின் அழுகை சத்தம் அவர்களின் நெஞ்சை உருக்கவில்லையா அவர்களின் பிஞ்சுக் குரல்கள் அவர்களின் செவியில் விழவில்லையா உரிமைப்போராட்டம் என்ற பெயரில் உறவை அறுப்பதா மதப்போராட்டம் என்ற பெயரில் மழலை உயிரெடுப்பதா பழிக்குப்பழி என்ற பெயரில் பாலகர்களின் பார்வை பறிப்பதா யாருக்குத்தான் லாபம் 100 உயிரெடுப்ப்தால் எதற்கிந்த ஆட்சி மோகம் தாய்மார் கண்ணீர் விடவா அஹிம்சையாய் போராடு அநீதி இழைக்காதே குரல் கொடு குரவளை அறுக்காதே துள்ளி எழு துப்பாக்கி தூக்காதே ஆட்சி செய் ஆணவம் காட்டதே சத்தம் கொடு சர்வாதிகரம் செய்யாதே கொள்கை பரப்பு கொலை செய்து விடாதே சிறந்த நாளில் சிறுவர்களுக்கான துஆக்களுடன் ஹ...

ஏதோ அது ஏதோ

பூமியை நிலா போல் சுற்றினாயே கண்ணை கண்கொண்டு கடைந்தாயே என்னுயிரில் உன்னுயிர் சேர்த்தாயே வயதில் வன்முறைகள் செய்தாயே என்னை உன்வசம் ஈர்த்தாயே இமைகள் மூடாமல் கனவு கண்டேன் கால்கள் உன் வழியில் போக கண்டேன் சுவாசம் புதிதாய் ஆக கண்டேன் பெண்ணாய் பிறந்த பெருமை கண்டேன் ஏதோ அது ஏதோ எந்தன் கண்ணில் விழுந்தது ஏதோ அது ஏதோ எந்தன் நெஞ்சை இறுக்கிய கயிறது ஏதோ அது ஏதோ உயிரில் கலந்தது ஏதோ அது ஏதோ அது காதல் முடிவில்லாப் பாடல் நெஞ்சம் ரெண்டும் மோதல் மருந்தில்லா காயம் மனதை தொடும் மாயம்

மின்னலில் புகைப்படம்

அவள் கை கோர்த்து மழையில் நனைய வேண்டும் அவள் நெற்றி மீது சிறுதுளியாய் விழ வேண்டும் மின்னலில் புகைப்படமெடுத்த ு உடல்களை தீயாக்க வேண்டும் துளி உரசிடும் இடமெல்லாம் அவள் ஸ்பரிசம் வேண்டும் முழக்கங்ள் இசையாகி அதற்கேற்றால் போல் ஆடிடவேண்டும் இவை எல்லாம் என் கானல் மழையில் என்று தெரியும் இருப்பினும் அவளோடு வாழும் கற்பனை கூட ஒரு இன்ப மழைதான் என் நெஞ்சில்