பாலைவனத்தில் தூரத்தே பார்த்த பச்சை மரத்தை நோக்கி சென்று வந்த வழி மாறித்திரிறேன் என்னவள் உன் நினைவுகளால் கால்த்தடங்கள் தேடினேன் காற்றில் மணல் மூடியதால் என்னவோ கால்த்தடங்கள் கண்ணெட்டும் தூரம் வரையில் காணவில்லை இருக்கட்டும் தாகிக்கிறது தண்ணீர் தேடுகிறேன் ஒட்டகங்கள் குடித்துவிட்டதால் என்னவோ தண்ணீர் கூட கிடைக்கவில்லை நானும் ஒட்டகம் போல உன் நினைவுகளை சேமித்து ஒவ்வொரு கணமும் மீட்டுகிறேன் வற்றாத குளமாய் உன் நினைவுகள் என் மனக்குளத்தில் வெயில் எரிக்கிறது பாதங்களை நீ இருந்திருந்தால் என்னை இந்த வெயில் தீண்டவிட்டுருக்க மாட்டாய் அல்லவா உன் நிழல் தேடுகுறேன் என் உடல் குளிர
Comments
Post a Comment