Skip to main content

கனாக்களில் கண்ணீர்

இராத்திரி பொழுதுகளில் இறுக்கமாக என் கழுத்தை சுற்றுகிறது
இதயம் இரங்கி கண்ணீர் வடிக்கிறது
இன்றைக்கும் என்றைக்கும் இதை நிலைதான் என்னவள் 'ச்சீ' என்ற சொல்தான் காரணமா

கனவுகளை தூங்கவிடவில்லை
காதலதை கலக்கவிடவில்லை
கவிதைகளால் காதல் வருடவிடவில்லை
கற்பனையில் கூட சிரிக்கவிடவில்லை

ஜாதி மதம் பாராமல் ஒற்றைப்பார்வையில் உயர் உறுஞ்சிய காதல் சுகமாய் தெரிந்து
இன்றய ரத்த்தை உறுஞ்சும் போதுதான் நிஜமுகம் புரிகிறது
எத்துனை அகோரம் அய்யோ

அழக்கூட அனுமதியில்ல
அருகில் அவள் இல்லாத போது
ஆரறிவு அது நதியில் இலை போல்
ஓடி கரையொதுங்கிவிட்டது
ஓஹோ கண்டுவிட்டது எத்துனை ஆழமானது காதல்

அன்பு வைத்தல் தகுதி அவளுக்கில்லை
அழித்துவிட்டாள் அத்துணை காலம்
அரிது அரிதாய் சேர்த்த அழப்பெரிய அன்பை

காதலில் ஊனமானேன்
கற்பனையின் காகிதமானேன்
கண்ணெதிரே கானலானேன்
கனாக்களில் கண்ணீரானேன்.
              :ஹபீஸ் அஹமட்

Comments