Skip to main content

மின்னலில் புகைப்படம்

அவள் கை கோர்த்து மழையில் நனைய வேண்டும் அவள் நெற்றி மீது சிறுதுளியாய் விழ வேண்டும் மின்னலில் புகைப்படமெடுத்த ு உடல்களை தீயாக்க வேண்டும் துளி உரசிடும் இடமெல்லாம் அவள் ஸ்பரிசம் வேண்டும் முழக்கங்ள் இசையாகி அதற்கேற்றால் போல் ஆடிடவேண்டும் இவை எல்லாம் என் கானல் மழையில் என்று தெரியும் இருப்பினும் அவளோடு வாழும் கற்பனை கூட ஒரு இன்ப மழைதான் என் நெஞ்சில்

Comments