அன்று உன் முத்தங்களில் முக்தி பெற்று போயிருந்த நான் இன்று உன் மௌனங்களில் சக்தி அற்று போயிருக்கிறேன் சில வேளை நதியாய் வந்து என்னில் தவழ்ந்து செல்வாய் சில வேளை வெயிலாய் வந்து என்னில் வறட்சியைத் தருவாய் கால நதியில் சில நினைவுகள் என்னைக் கடந்து கடலுடன் இணைந்து விட்டது போலும் தோயவில்லை என் முயற்சி கண்ணீரை நதியாக்கி என்னில் உன் நினைவுகளை கலக்க விடுகிறேன் வசந்தகால இலைகளாய் இளந்துளிர் விட்டு பசுமையாய் இருந்தேன் உன் சுட்டெரிக்கும் பார்வையால் என்னவோ இப்பொழுதுகளில் இலையதிர்கால காயந்த சருகுகளாய் மண்ணிலே