Skip to main content

Posts

Showing posts from June, 2015

விழி ரகசியம்

உன் விழிகளில் கொழுந்து விட்டெரியும் தீயை எவ்வாறு என் மனத்தில் கொழுத்துகிறாயோ . இன்னும் எனக்கந்த இரகசியம் புரியவில்லையடி

சருகுகளாய் நான்

அன்று உன் முத்தங்களில் முக்தி பெற்று போயிருந்த நான் இன்று உன் மௌனங்களில் சக்தி அற்று போயிருக்கிறேன் சில வேளை நதியாய் வந்து என்னில் தவழ்ந்து செல்வாய் சில வேளை வெயிலாய் வந்து என்னில் வறட்சியைத் தருவாய் கால நதியில் சில நினைவுகள் என்னைக் கடந்து கடலுடன் இணைந்து விட்டது போலும் தோயவில்லை என் முயற்சி கண்ணீரை நதியாக்கி என்னில் உன் நினைவுகளை கலக்க விடுகிறேன் வசந்தகால இலைகளாய் இளந்துளிர் விட்டு பசுமையாய் இருந்தேன் உன் சுட்டெரிக்கும் பார்வையால் என்னவோ இப்பொழுதுகளில் இலையதிர்கால காயந்த சருகுகளாய் மண்ணிலே

உன் நினைவுகளை திருடாதே

எங்கே போவேன் எதைக்கொண்டு போவேன் இறந்தா போவேன் உன் நினைவுகள் இருக்கும் வரை என் மனதுக்கு இறப்பில்லை உனக்காக இதயம் கூட பரிசளிப்பேன் ஆனால் தயவு செய்து உன் நினைவுகளை மட்டும் என்னிடம் கேட்டுவிடாது உனக்காக நான் செய்ய மறுக்கும் ஒரே காரியம் உன் நினைவுகளை மறப்பதுதான் மன்னித்துவிடு அதை மட்டும் கேட்காதே என்னிடம்

பாலைவனத்தில் என் பாதச்சுவடுகள்

பாலைவனத்தில் தூரத்தே பார்த்த பச்சை மரத்தை நோக்கி சென்று வந்த வழி மாறித்திரிறேன் என்னவள் உன் நினைவுகளால் கால்த்தடங்கள் தேடினேன் காற்றில் மணல் மூடியதால் என்னவோ க...